BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
-
இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன், குறையும் சேமிப்பு - என்ன காரணம்? நாட்டிற்கு என்ன பாதிப்பு?
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதேநேரத்தில், இந்திய குடும்பங்களின் கடன் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
-
அமெரிக்காவில் உயர் கல்வி பயில சென்று உயிரை பறிகொடுக்கும் இந்திய மாணவர்கள் - என்ன காரணம்?
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவது ஏன்? அமெரிக்க பல்கலைக் கழகங்களில் என்ன நடக்கிறது?
-
மருத்துவ காப்பீடு இனி 90 வயதிலும் பெறலாம்: இதயம், புற்றுநோய்க்கும் காப்பீடு உண்டு - புதிய விதிகள் என்ன?
இந்தியாவில் இனி 90 வயதிலும் ஒருவர் மருத்துவக் காப்பீடு பெறலாம். எய்ட்ஸ், புற்றுநோய், இதய நோய் பாதிப்பு இருந்தாலும் கூட மருத்துவக் காப்பீடு பெற முடியும். இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய விதிகள் கூறுவது என்ன?
-
மதுரை அருகே கோழிக் கழிவுகளை உரமாக மாற்றும் ஆலைக்கு 5 கிராம மக்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வு
மதுரையில் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலையால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக கொக்கலாஞ்சேரி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த மக்கள் கூறுவது என்ன? உண்மையில் அந்த ஆலையில் என்ன நடக்கிறது?
-
பெண் கால்பந்து ரசிகையை கட்டிப்பிடித்த இரானிய கோல்கீப்பருக்கு ரூ.4 லட்சம் அபராதம்
இரானிய கால்பந்து கிளப்பான 'இஸ்திக்லால்' அணியின் கேப்டனும் கோல் கீப்பருமான ஹொசைன் ஹொசைனியை பெண் ரசிகர் ஒருவர் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்து கட்டிப்பிடித்ததால் ஹொசைனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது. உண்மையில் என்ன நடந்தது?
-
மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள்
மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் பல மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படியான, சில இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம்.
-
காணொளி, மகாராஷ்டிரா: 20 ஆண்டுகளாக தினசரி உயிரைப் பணயம் வைத்து வாழும் பழங்குடிகள் - ஏன் இந்த அவலம்?கால அளவு, 6,28
இது, மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம். உலகளவில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி இன்னும் இந்த கிராமத்தைச் சென்று சேரவில்லை. ஏன்? கிராம மக்கள் கூறுவது என்ன?
-
ஐ.பி.எல்.லில் தொடரும் அதீத ரன் குவிப்பு - பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் தவிப்பது ஏன்?
200 ரன்களை எளிதாக கடக்கும் அணிகள், தொடர்ந்து பறக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஐபிஎல் போட்டிகளின் போக்கு மாறுகிறதா? ஐ.பி.எல்.லில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் தவிப்பது ஏன்?
-
'இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிப்பு' - அமெரிக்க அறிக்கை மணிப்பூர், காஷ்மீர் பற்றிச் சொல்வது என்ன?
சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை, பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
-
டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன?
திமுக நிர்வாகியின் மகன் திமுக நாடாளுமன்ற உறுப்பினரை விமர்சித்துப் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக தரப்பினர் கூறுவது என்ன?
-
நாடாளுமன்றத் தேர்தல் 2024: 13 மாநிலங்களில் 88 இடங்களுக்கு நடந்து முடிந்த வாக்குப்பதிவு - முழு விவரம்
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளி, ஏப்ரல் 26-ஆம் தேதி) காலை 7 மணிக்குத் துவங்கியது. இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடுகிறார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் தீவிர போராட்டம், 100க்கும் மேற்பட்டோர் கைது - என்ன நடக்கிறது?
காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புப் பார்வை
-
காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?
காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.
-
இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம்
முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்
-
பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்
நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?
-
பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?
சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?
-
தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?
-
தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?
இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?
-
வடலூரில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு ஏன்?
வடலூரில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?
-
தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?
சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?
-
சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?
சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளை விட பெரிய ஒரு ராட்சத பனிப்பாறை அண்டார்டிகாவை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ராட்சத பனிப்பாறை நகர்வது ஏன்? அது அழிவின் பாதையில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? அதன் விளைவு என்ன?
-
மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது?
18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
-
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?
கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?
-
வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?
அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்